இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கிக்கு பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வூதியத்திற்கான மாதச் செலவு 2600 கோடி ரூபாயாகும்.
இதேவேளை , சமுர்த்தி உள்ளிட்ட அரச மானியங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்ட திகதிகளில் வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.