சீன அரசாங்கத்தினால் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பை விநியோகிப்பதற்காக அரசாங்கத்தினால் 122 மில்லியன் ரூபா செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த டீசல் கையிருப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் பவுசர்கள் ஊடாக விநியோகிக்கப்படும்.
விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இவ்வருடத்திற்கு கிடைக்கப்பெறவுள்ள நிதியைப் பயன்படுத்தி உரிய தொகையை இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிய 6.8 மில்லியன் லீற்றர் டீசல் தொகை விவசாயிகள் அபிவிருத்தி திணைக்களத்தினால் அறுவடைக்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.