உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில்  மின்வெட்டு வேண்டாம்: மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை

Date:

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில்  மின்வெட்டுகளை திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஜனவரி 23,  முதல் பெப்ரவரி 17, 2023 வரை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது கல்வி உரிமையை தடையின்றி பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் நிலவும் மின்வெட்டு அட்டவணை குறித்த அண்மைக்காலச் செய்திகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...