கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை, நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும், அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.