குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேயர் பதவி வெற்றிடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கடமைகளை உள்ளடக்கும் பொறுப்பு, பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது.