ஜனாதிபதி தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழா இன்று!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா இன்று உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகும் கௌரவ அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தனவும், பிரதம பேச்சளராக தென் ஆபிரிக்க உலமா சபை தலைவா் மௌலானா இப்றாஹீம் பாஹ்ம் கலந்து கொண்டனா்.

நுாற்றாண்டை முன்னிட்டு விசேட முத்திரையை  ஜனாதிபதி வெளியீட்டு வைத்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்­லிம்­களின் சன்­மார்க்கத் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக கடந்த 1924 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்­பாகும்.

2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்­டத்தின் பிர­காரம் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்­றத்தில் ஜம்­இய்யா கூட்­டி­ணைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் 24 மாவட்டங்களிலும் பிர­தேசக் கிளைகள் என 164 கிளைகள் உள்­ளன. 8000 க்கும் மேற்­பட்ட ஆலிம்கள் தற்­போது ஜம்­இய்­யாவில் அங்கம் வகிக்­கின்­றனர்.

ஜம்­இய்­யதுல் உல­மாவின் கீழ் இயங்கும் கல்­விப்­பி­ரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்­வே­று­பட்ட உப பிரி­வுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்­ணி­ல­டங்­காத சேவைகளை செய்து வருகின்றது.

ஜம்­இய்­யாவின் தேசிய அள­வி­லான சமூக வேலைத்­திட்­டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்­பட முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் பய­ன­டைந்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் முஸ்லிமும், முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் ஜம்­இய்யா இந்த நாட்டில் செய்து வருகின்றது.

இவ் அமைப்பு சுயதீனமாக இயங்கும் ஒர் அமைப்பாகும். கட்சி, அரசியல் இன,மத பிரதேச வேறுபாடின்றி ஆன்மீகத்துறையில் தனது செயற்பாட்டினை செயற்படுத்தி வருகின்றது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...