டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்: பிரித்தானிய உயர் நீதிமன்றத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற உத்தரவு

Date:

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய ஆவணங்களை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து நீதிமன்றத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும் வரை கைது உத்தரவு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பிப்பது பொருத்தமானதல்ல என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தொடரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீதவான் விசாரணைக்கு முன்னதாக நீதிமன்றம் அவருக்கு பயணத்தடை விதித்திருந்தது.

2021 ஆம் ஆண்டில், டயானா கமகே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து இல்லாமல் இலங்கையில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜை என்ற புகாரின் பேரில் அவருக்கு எதிராக சிஐடி தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கையை தாக்கல் செய்தது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கையின்படி, குற்றவியல் சட்டத்தின் 175 வது பிரிவின் கீழ் மற்றும் 45(1)(a) மற்றும் 45 (1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...