நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசை?

Date:

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண உயர்வை அதிகரிக்காவிட்டால், நிச்சயமாக நீண்ட மின்வெட்டு ஏற்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மின்சார உற்பத்திக்காக கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கான கட்டணத்தை மின்சபை செலுத்தாவிட்டால் நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான  தொகை தற்போது பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...