நாளை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Date:

நாளை (23.01.2023) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

“இந்த மேலதிக 10 நிமிடங்கள், 3 மணிநேர கட்டுரை வினாத்தாள்களுக்கு வழங்கப்படுகிறது. பல்தேர்வு வினாக்கள் கொண்ட வினாத்தாள்களுக்கு மேலதிக நேரம் கொடுக்கப்படவில்லை.

பெரும்பாலான நேரங்களில், ஒரு மணிநேர வினாத்தாள் பல் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. அது பல்தேர்வு இல்லை. நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத வேண்டும்.

அந்த வினாத்தாளிற்கு நீங்கள் முதலில் கேள்விகளை நன்றாக படித்து விடையளியுங்கள்.

பரீட்சையில் கூடுதலாக 10 நிமிடம் கொடுத்துள்ளோம். அதாவது காலை 8.30 மணிக்கு வழங்கப்படும் வினாத்தாளுக்கான, விடைத்தாள் 11.40 இற்கு பெற்றுக்கொள்ளப்படும்.எனவே மொத்தமாக  3 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...