பல இந்திய நகரங்களில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரைக்க முடியாது என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் மீண்டும் ஒரு தடவை அனுமதி வழங்கியது.
அதற்கமைய, இந்த வார இறுதிக்குள் இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது