Mobile Journalism புத்தளத்தில் பயிற்சியுடன் கூடிய செயலமர்வு: விண்ணப்ப முடிவு திகதி நாளை!

Date:

Mobile Journalism (MOJO) புத்தளத்தில் இடம்பெறவுள்ள பயிற்சியுடன் கூடிய செயலமர்வுக்கான விண்ணப்பத் திகதி நாளையுடன் முடிவடைகின்றது.

அதற்கமைய எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வில் விரைவாக பதிவு செய்துகொள்ள முந்திக் கொள்ளுங்கள்.

குறித்த பயிற்சி செயலமர்வு எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. பயிற்சியை நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் இருப்பதால் பதிவு செய்துக்கொள்வதோடு புத்தளம் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் முதல் 30 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர்.

பதிவுகளுக்கு: https://forms.gle/5TvzSn2A7S9S8Kmr7

Popular

More like this
Related

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...