மக்கள் தங்களின், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள்.
நல்லாட்சி கொடுத்த தேசத் தலைவர்களை நினைத்துப் பார்க்கும் இந்த சரித்திர நாளை 74-வது குடியரசு தினமாக பாரத மண் கொண்டாடுகிறது.
74-வது குடியரசு தின விழாவிற்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியதை அடுத்து, அதிபர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
மூவர்ண கொடியை அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு காலை 10.30 மணியிலிருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.
அவர் அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.
வானில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் சாககசங்கள் நிகழ்த்திய வேளையில், டெல்லி ராஜபாதையில் இராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் உட்பட பல்வேறு அணிவகுப்புகள் நடத்தை வருகையாளர்களைக் கவர்ந்தனர்.
மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் அலங்கார அணிவகுப்புடன் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளிட்டவையும் இடம் பெற்றன.
அதோடு, அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
அதில், வேலுநாச்சியார், ஒளவியார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் தமிழ்நாடு ஊர்தியும் இடம் பெற்றிருந்தது.
எகிப்து அதிபர் அப்டேல் ஃபட்டா அல்-சிசி சிறப்பு விருந்தினராக இதற்கு வருகைத் தந்திருந்த வேளையில், அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றிருந்தது.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சுதந்திர தினத்திற்கு குடியரசு தினத்திற்கும் என்ன வேறுபாடு?
சுதந்திர தினம் என்பது நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள். அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசு தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது.
சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்தோம். அந்த அரசின் தலைமை பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார்.
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை சுதந்திர தினமாகவும் அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள் குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம். நாம் அனைவரும் இந்தியர்கள், பல மதங்களும், மொழிகளும் நம்மைப் பிரிக்கவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்துள்ளன. நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம்.
இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. 74வது குடியரசு தினத்தையொட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நமது பயணம் ஆச்சரியமானது. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றார்.
President Droupadi Murmu takes the salute of Lt Siddhartha Tyagi who leads the NAG Missile System of 17 Mechanised Infantry Regiment#RepublicDay2023 pic.twitter.com/fAOIEO1H9n
— ANI (@ANI) January 26, 2023