நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
பௌசி 1974 முதல் 1977 வரை கொழும்பு மேயராகவும், 1994 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சு பதவிகளையும் ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.