‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :மாபெரும் கவியரங்கு இன்று!

Date:

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில், புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு  இன்று இடம்பெறவுள்ளது.

இரவு 8.00 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் நிகழ ஏற்பாடாகிவரும் இக்கவியரங்கு, “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!” என்ற கருப்பொருளில் 09 கவிஞர்களின் பிரசன்னத்தில் நடைபெறவுள்ளது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமைகள் பலகோணங்களில் பகிரப்படவுள்ள இக்கவியரங்கில் பின்வரும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந் நிகழ்வு  கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமையில் நடைபெறும்.

வித்தியாசமான தலைப்புகளில் விழுமிய உணர்வுகள் சுமந்து விரிவான ஏற்பாடுகளுடன் தயாராகிவரும் இக்கவியரங்கம், நிச்சயம் நிறைவான பல படைப்புகளை வெளிக் கொணரவிருப்பதோடு அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக ஒரு திறந்தவெளி அரங்கில் மேடைப்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...