மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரி STF அதிகாரிகளினால் அதிரடி கைது!

Date:

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 350 கஞ்சா செடிகள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய்...

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில்...

இன்று முதல் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று...

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...