வங்கி ATM கொள்ளையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரி, 02 பல்கேரியர்கள், கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் இலங்கையர் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.