எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்கு 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில் இந்த பயிற்சிநெறி இடம்பெறவுள்ளது.
தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப் பயிற்சி நெறி முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ளது. பயிற்சியை நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் இருப்பதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்வதோடு புத்தளம் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பிக்கும் முதல் 30 பேர் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்படுவர்.