அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல கொடுப்பனவுகளை நிறுத்த தீர்மானம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதென்றால் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் இந்த அனைத்து கொடுப்பனவுகளை இடைநிறுத்தினால் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.