இறுதித் தூதரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய ‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ கவியரங்கு!

Date:

இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் அறிமுகம் செய்யும் வகையிலான மாபெரும் கவியரங்கு கடந்த வெள்ளிக்கிழமை (6ஆம் திகதி) புத்தளம் நகர மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன் புத்தளம் நகரில் நடைபெற்ற ‘பலஸ்தீன் கவிராத்திரி’ என்ற மாபெரும் வெற்றிகரமான நிகழ்ச்சியின் பின் ‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ என்ற நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

ஈழத்து இலக்கியவாதிகளில் பிரபலம் பெற்ற ஒருவரான கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் அவர்களின் திறமையான, இலக்கிய நயம் கலந்த தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற இக்கவியரங்கில், ஆண், பெண் என ஏராளமானோர் பிந்திய இரவென்றும் பாராது இந்நிகழ்வில் கலந்துகொண்டமை, இறைத்தூதர் மீதான பற்றையும் பண்பாடான கலை நிகழ்ச்சிகளில் உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தது.

எந்தவொரு விடயத்தையும் கலைத்துவத்தோடு செய்வது, குறித்த விடயம் மக்கள் மத்தியில் வேகமாக செல்வதற்கு சிறந்த வழியென்பதை எஸ்.ஏ.சி.பி. மரிக்கார் தலைமையிலான “CREATE” அமைப்பினர் நன்கு உணர்ந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தமையை பாராட்ட வேண்டும்.

கவிஞர்களான நாகராஜா (ஓய்வுநிலை அதிபர்), ஹிஷாம் ஹுசைன், எம்.ஏ.சி. அப்துல்லா (ஆங்கில ஆசிரியர்), இம்தாத் பசார், எஸ்.ஏ.சி. மரிக்கார், கவிதாயினி ஷரூபியா ஆசிரியை, கவிஞர் அஷ்ஷேக் எச்.எம் மின்ஹாஜ், எம்.எச்.முகமது ஆகியோர் கவிபாடி, இறைத் தூதரைப்பற்றி ஆழமான கருத்துப் பதிவை ஏற்படுத்தியதோடு, பாடகர்களான சனூன், அயாஸ் அஹமட், எம்.ஆர். தன்சீல், அம்ஜுதீன் மற்றும் அபூ ஹுரைரா ஆகியோர் நிகழ்வின் ஆரம்பத்தில் இஸ்லாமிய கீதங்களை இசைத்து சபையோரை உற்சாகப்படுத்தியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வின் முடிவில் கவிஞர்களுக்கான நினைவுச் சின்னங்களும் பிரமுகர்களின் கைகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இம்மாபெரும் கவியரங்குக்கான அனுசரணையை கொழும்பு அமேசன் கல்லூரி (Amazon College), ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை, IMARA Software Solution என்பன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லா இக்கவியரங்கை மிகச் சிறப்பாக வழி நடத்தினார்.

 

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...