இலவச விழி வெண்புரை (கட்ரக்) சத்திரசிகிச்சையை மேற்கொள்ள இலங்கையின் கண் தான சங்கம் முன்வந்துள்ளது.
அதற்கமைய 500 பேருக்கு குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவிருப்பதுடன் இதுவரையில் 280 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் வறுமையின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு இலவசமாக வெண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கண் தான சங்கத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
அதற்கமைய சத்திரசிகிச்சையை பதிவுசெய்ய வருபவர்கள் கிராமசேவகர் சான்றிதழ், நீரிழிவு தொடர்பான பரிசோதனை, ECG பரிசோதனை உள்ளிட்ட பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.