இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா காலமானார்!

Date:

இலங்கையில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா பீரிஸ் இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இலங்கை சினிமாவின் முன்னோடியான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியும் ஆவார். கெஹெனு லமாய், கங்கா அத்தாரா, யஹலுவோ, மாயா, சக்மான் மாலுவா மற்றும் வைஷ்ணவி போன்ற கிளாசிக்கல் இலங்கை ஹிட்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அவர் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...