உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அமைய இந்த வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட உள்ளன.
வாக்குச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு அவை அச்சிடும் பணிகளுக்காக விரைவில் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.