நிர்வாகத்தைப் பொறுப்பேற்று, சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் குவைத் பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் 85 வயதான ஆட்சியாளர் எமிர் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மகனான பிரதம மந்திரி ஷேக் அகமது நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபாவால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து உருவாக்கப்பட்ட மூன்றாவது அரசாங்கம் இதுவாகும்.