சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Date:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி காலி முகத்திடலில் 75ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதனை பொது நிர்வாக அமைச்சு உறுதி செய்துள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செலவுகளை குறைக்க முயற்சிக்கப்படும் எனவும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார போபகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 75ஆவது சுதந்திர தின வைபவத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும், நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...