ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக தடயவியல் அறிக்கைகளை கோருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்னிலையாகி விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் பின்வரும் உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், நிபுணர் அறிக்கைகளை பெற்றுக்கொள்வது அவசியமானதாலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளது.
இதேவேளை இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த வயர் கேபிள்கள், ரத்தக்கறை படிந்த துணி, தினேஷ் ஷாப்டரின் விரல் நகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர்.
அதுமட்டுமின்றி தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையும் இன்று (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.