தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தது.

Popular

More like this
Related

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...