நாட்டின் 33 உணவுப் பொருட்களை சீனாவுக்கு அனுப்ப அனுமதி!

Date:

இலங்கையிலிருந்து சீனாவுக்கு 33 உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன பொது சுங்க நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவற்றில் 29 தயாரிப்புகள் கடல் மீன்பிடி நீர்வாழ் பொருட்கள் என்றும், சீனாவில் பதிவுசெய்யப்பட்ட 38 இலங்கை நிறுவனங்கள் அந்தப் பொருட்களை ஏற்றுமதியாளர்களாகச் செயல்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சீன மக்கள் குடியரசின் பொது சுங்க நிர்வாகத்திற்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் கால்நடை சுகாதாரத் தேவைகள் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு கடற்றொழில் அமைச்சர்   டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காகவும் தயாரிப்புகள் கிடைத்ததாக அமைச்சர் கூறினார்.

 

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...