நீதிபதிகளிடம் வரி அறவிட இடைக்காலத் தடை பிறப்பிப்பு!

Date:

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த சம்பளம் மற்றும் வருமானம் பெறுவோரிடம் வரி அறவிட அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை, நீதிமன்ற நீதிபதிகள் விடயத்தில் நடைமுறைப்படுத்தாமல் தற்போதைய நிலையை பேணுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, முற்பணம் சார்ந்த வருமான வரியை ஆட்சேபித்து இலங்கை நீதிச் சேவைகள் சங்கம் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...