பல்கலைக்கழக மாணவி கொலை: கொலையாளியின் வாக்குமூலம் ஏன் ஊடகங்களிடம் வழங்கப்பட்டன!

Date:

கொழும்பு பல்கலைக்கழக மாணவி  கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களை ஏன் பொலிஸார் ஊடகங்களிடம் வழங்கினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று ஜனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார,

இந்த உணர்வுபூர்வமான வாக்குமூலம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரினார்.

பொலிஸ் மற்றும் நீதித்துறையின் நம்பிக்கையில் சந்தேகநபர் இந்த வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், முக்கியமான பிற தகவல்களை கசியவிடுவதில் காவல்துறை ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் அண்மையில்  கத்தி குத்துக்கு இலக்காகி மரணித்த சம்பவம் தொடர்பான விசாரணைத் தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...