இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

Date:

  இந்தியாவில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சமில இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
முதல் தொகுதியாக இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்கள் அரசின் கால்நடைத் துறையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை  பேக்கரி தொழிலுக்கு முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  முட்டை ஒன்றின் விலை 48 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறுகிறார்.

இந்த தட்டுப்பாடு காரணமாகவே அடுத்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 55 இலட்சம் முட்டை தேவைப்படுகின்ற போதிலும் 50 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

ஆனால்இ வாரந்தோறும் முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாகவும்இ கோழிப்பண்ணைகளில் இருந்து ஒரு முட்டை 42 அல்லது 43 ரூபாய்க்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்இ 60 கிராமுக்கு மேல் முட்டை இருந்தால் விலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...