இம்முறை 36,000 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Date:

இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் இருப்பதால் 36,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 676,873 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டம் தபால்மூல வாக்களிப்பில் அதிகளவானோர் தகுதி பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கை 75,579. மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 55,750 பேரும், கண்டி மாவட்டத்தில் 54,012 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர்கள் குறைவாக உள்ளனர், அந்த எண்ணிக்கை 3,187 ஆகும்.

கடந்த 2020 நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 47,430 ஆகும். அந்தத் தேர்தலில், தபால் மூலம் வாக்களிக்க 753,037 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 705,085 ஆகும்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...