கிறிஸ்தவ விவகார திணைக்களம், முஸ்லிம் சமய திணைக்கள கட்டடத்திற்கு மாற்றம்!

Date:

கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள முஸ்லிம் சமய  கலாசார திணைக்கள கட்டடத்திற்கு கிறிஸ்தவ கலாசார திணைக்கள அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலக ஆரம்ப நிகழ்வில் புத்த மத மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்து மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார திணைக்­க­ளங்கள் வாடகை கட்­டி­டத்தில் இயங்கி வரு­வதால் இக்­கட்­டிடத்­துக்கு இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

கலா­சார அமைச்சின் தீர்­மா­னத்­தின்­படி 3ஆம் 4ஆம் மாடி­க­ளுக்கு இந்­து­மத விவ­கார திணைக்­க­ளமும், 5ஆம் மாடிக்கு கிறிஸ்­தவ விவ­கார திணைக்­க­ளமும் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 6ஆம், 7ஆம், 8ஆம் மாடி­களில் கேட்போர் கூடம் அமைந்­துள்­ளது.

9 மாடி கட்­டடத்தில் இயங்கி வந்த முஸ்லிம் சமய  கலாசார திணைக்கள நடவடிக்கைகள் 1ஆம்,2ஆம் மாடிக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வக்பு சபை, வக்பு ட்ரிபி­யுனல், காதிகள் மேன்­மு­றை­யீட்டு சபை, ஹஜ் குழு காரி­யா­லயம், அரபுக் கல்­லூரி, அஹ­தியா தலை­மை­யகம் போன்றவை வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: அஷ்ரப் ஏ. சமத்)

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...