‘திங்களன்று கொழும்பை சுற்றிவளைப்போம்’: போராட்டத்துக்கு ஆயத்தமாகும் ஐ.ம.ச

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரியத் திகதியில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (20) இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன், இப்போராட்டம் நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பைச் சுற்றிவளைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...