துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் ஹக்கீம், துருக்கி தூதுவரிடம் அனுதாபம்

Date:

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள துருக்கித் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் அது தொடர்பிலான கருத்துக்களை எழுதிக் கையெழுத்திட்டதோடு, அவர் தூதுவரிடம் இவ்வாறு தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

மேலும் உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் அங்குள்ள மக்களின் துயரத்தில் பங்கேற்பதாகவும் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டிமெட் செகெர்சியோக்லுவிடம் அனுதாபத்தை தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...