பல்கேரியாவில் 18 அகதிகள் சடலமாக மீட்பு: 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

Date:

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர்.

குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லொரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கண்டெய்னர் லொரியை திறந்து பார்த்தனர். அப்போது, கண்டெயினரில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில், 18 பேர் பிணமாக கிடந்தனர். குழந்தைகள் உட்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்றும் அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்தது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு செல்ல முயற்சித்தது தொடர்பாக 4 பேரை பல்கேரியா பொலிஸார் கைது செய்தனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...