பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், அதில் சந்தேகமே இல்லை:இலங்கை இராணுவம் அறிவிப்பு!

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

பிபிசி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த  இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் பிபிசிக்கு கூறுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் எம். வசம் உள்ளன. 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

மரபணு பரிசோதனை ஆதாரங்களையும் நாம் எடுத்துள்ளோம். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்.

குறித்த திகதியில் பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். தவறான தகவல்களை அவர்  வெளியிடுகின்றார்.

இந்தக் கூற்று எங்களுக்கு எந்தவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் எங்களுக்கு அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பது தெளிவாகத் தெரியும், அதில் சந்தேகமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...