புதிய பணிப்பாளருக்கு சர்வ மதத் தலைவர்கள் வாழ்த்து!

Date:

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்ற செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்களை இன்று (06) உத்தியோக பூர்வமாக சர்வ மதத் தலைவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன்போது பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களான கௌரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி மற்றும் கௌரவ பாதிரியார் கலாநிதி நிஷான் குரே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இலங்கை நிருவாக சேவையின் முதல்தர அதிகாரியான இவர் இலங்கை நிருவாக சேவையில் 19 வருடத்திற்கு மேலான அனுபவத்தையும் கொண்டவர்.

இவர் கேகாலை மாவட்ட ருவன்வெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், கேகாலை மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தின் ஆணையாளராகவும் (அபிவிருத்தி), அரநாயக்க பிரதேச செயலாளராகவும் உயர் பதவிகளை வகித்தவர்.

இந்நிகழ்வில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான  அன்வர் அலி, அலா அஹமட், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.எம்.எம்.முப்தி உள்ளிட்ட திணைக்கள அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...