பரீட்சைகள் திணைக்களம் அரச மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச துறையில் பணிபுரியும் 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.