2023ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
இதன்படி, ஜனவரி 2022 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரியில் இந்த நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பைக் காட்டுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை நாட்டுக்கு நல்ல நிலைமை என அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
Update of the number of tourist arrivals in SL for January 2023. Encouraging to see the growth #visitsrilanka pic.twitter.com/gltE4uNmbK
— Harin Fernando (@fernandoharin) February 1, 2023