உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று (27) IFC வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30% இறக்குமதிக்கு நிதியளிக்கும் வசதியை மூன்று தனியார் வங்கிகள் பெறும் என்று சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்த நிதியுதவி, முதலீட்டாளர் சமூகத்தில் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக புதிய மூலதன வரவுகளை ஈர்க்கும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக தெற்காசியாவுக்கான நிதியியல் நிறுவகங்கள் குழுமத்தின், சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபன முகாமையாளர் ஜூன் பார்க் தெரிவித்துள்ளார்.