கஞ்சா கலந்த சாக்லேட்களை தயாரித்து விநியோகித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.
கஞ்சா கலந்த சாக்லேட்டுகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பல சமூக ஊடக விளம்பரங்களில் இவை விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்த்தின் அதிகாரி தரங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் பல விளம்பரங்கள் வெளியிடபட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.