கிம்புலாவல வீதியோர உணவுக் கடைகளை அகற்ற பந்துல உத்தரவு: நாடாளுமன்றத்தில் கேள்வி

Date:

எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் கிம்புலாவல பகுதியில் உள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

கிம்புலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை அகற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் கீழுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

வீதி விபத்துக்கள் உட்பட பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் சுமார் 3000 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் கிம்புலாவல பிரதேசமும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய விமல் விரவங்ச, ஜே.சி. அலவத்துவல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் இவ்வாறான தீர்மானங்களினால் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அமைச்சர் பந்துல குணவர்தன  பயணிக்கும் போது, கிம்புலாவல வீதியில் அதிக வாகன நெரிசல் காணப்படுவதால், வாகன நெரிசலுக்கு காரணமான இந்த வீதி உணவு விடுதிகள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...