குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் குழுவினர்: சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு

Date:

குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு தேசிய குழந்தைகள் நல ஆணையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் இவ்வாறான நிலைமைகள் பதிவாகி வருவதாக  அதிகார சபையின் தலைவரான சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் குழந்தைகளை பிச்சை எடுக்கவே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் சுமார் எட்டாயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களை அடித்தல், துன்புறுத்துதல், குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடங்களின் பகிர்தல், துஷ்பிரயோகத்திற்குட்படுத்துதல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...