சஜித்- அனுரவின் கட்சிகள் இணைந்து ஒரே மேடையில் போராட்டம்?

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு மேடையில் போராட்டம் நடத்தவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறான செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மறுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு இரு கட்சிகளும் பொதுவான மேடையில் இறங்க முடிவு செய்துள்ளதாக சில செய்தி இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

‘மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் மத்தும பண்டார தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பொது பேரணியை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவுடன் நான் ஒருபோதும் உரையாடவில்லை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று மத்தும பண்டார ஆங்கில செய்தி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...