சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில், யூடியூப் சமூக ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் காவல்துறை அமைச்சர் திரான் அலஸ் மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் இணைய ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த செபால் அமரசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.