சவூதி மண்ணில் முதன்முறையாக வளைகுடா இலங்கையர்களுக்கான கால்பந்து கிண்ணம்!

Date:

சவூதி ரியாதில் வளைகுடா இலங்கையர்களுக்கான கால்பந்து கிண்ணத்துக்கான போட்டிகள்  (gulf lankans challenge TROPHY)  நடைபெற்றது.

நேற்றைய தினம் (24)  ரியாத் சொக்கர் பிரக்டீசஸ் (RIYADH SOCCER PRACTICES), கழகத்தின் ஏற்பாட்டில் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த போட்டி நிகழ்ச்சியின் விசேட அதிதியாக சவூதி இலங்கை தூதரகத்தின் தூதுவர் பாக்கீர் எம். அம்ஸா மற்றும் அதிதிகளாக இலங்கைக்கான சவூதி கலாசார அமைப்பின்  அங்கத்தர்களான எம். நிஹால், கமகே  ரியாஸ் யூசுப், ரொமமேஷ் பெரேரா, சசிகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டிகள் 14 வயதுக்குட்பட்ட மற்றும் வளர்ந்தவர்களுக்கான போட்டடிகள் நடைபெற்றன.

Riyadh SOCCER Practices, KSA மற்றும் Matrix Sports Academy Doha Qatar அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதலாவது  போட்டியில் 14 வயதின் கீழ் மாணவர்கள் விளையாடி ஒன்பதுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் Riyadh SOCCER Practices, KSA அணி வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

அடுத்த போட்டியாக 14 வயதின்கீழ் ஜூனியர் பிரிவு போட்டியில் Matrix Sports Academy Doha Qatar ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதை லியாத் இம்தியாஸ் மற்றும் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை அம்ரிஷ் சதீஷ், ஷயான் கமில் என இருவரும் பெற்றுக் கொண்டனர்.

 

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...