‘சீனாவின் தாமதம் கடன் வழங்குவதில் முக்கிய தடையாக உள்ளது’

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் விஜேதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்றாலும் அப்போது இருந்த மத்திய வங்கி ஆளுநர் மறுத்ததன் காரணமாக அதிலும் தாமதம் ஏற்பட்டது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக Bloomberg செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...