ஜெய்சங்கர் தனது இலங்கை பயணத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

Date:

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை இன்று (31) புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து  கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் சமீபத்திய இருதரப்பு விஜயம் குறித்தும் விவாதித்தனர்.

கடந்த மாதம் ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய அவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் மற்றும் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்...

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...