தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டியுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் பணியில் நிவாரணப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நிவாரணப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.