தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமுது விதானகே அரசாங்க சொத்துக்களை மோசடி செய்து வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.